பாடலில் புகழ்ந்த கண்ணதாசன்.! ஸ்டுடியோவில் சிரித்த எம்.ஜி.ஆர்.!

பாடலில் புகழ்ந்த கண்ணதாசன்.! ஸ்டுடியோவில் சிரித்த எம்.ஜி.ஆர்.!



This is how the singing Klia song came about

மக்கள் திலகம் எம்ஜிஆர், சரோஜாதேவி உள்ளிட்ட இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் பணத்தோட்டம். இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் அனைவரும் சரோஜாதேவியை கன்னடத்து பைங்கிளி என்று செல்லமாக அழைப்பார்கள். சரோஜாதேவி கொஞ்சலாக பேசும் தமிழ் அந்த காலத்தில் மிகவும் பிரபலமாகும். அந்த திரைப்படத்தில் பேசுவது கிளியா என்ற அருமையான காதல் பாடல் இருக்கும்

அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன், மேலும் அந்த பாடலை எம்ஜிஆருக்கும், சரோஜாதேவிக்குமான காதல் பாடலாகவே அவர் வடிவமைத்திருந்தார். அதாவது, எம்ஜிஆர் சரோஜாதேவியின் அழகை வர்ணித்து பாட வேண்டும். ஆனால் சரோஜா தேவியோ, எம்ஜிஆரின் பெருமையை பறை சாற்ற வேண்டும் என்ற அளவில் அந்த பாடல் அமைந்திருந்தது.

M.G.R

சரோஜாதேவி நடந்து சென்றால், அவருடைய நடையை பார்ப்பதற்காகவே அவருடைய பின்னழகை கேமராவில் காட்டுவார்கள். அந்தக் கால திரைப்படங்களில் இது மிகவும் பிரபலம் ரசிகர்களின் ரசனையை தூண்டுவதற்காகவே இது போன்ற காட்சிகளை வைத்திருப்பார்கள் இயக்குனர்கள்.

நடக்கும்போது வளைந்து, நெளிந்து செல்லும் அவருடைய உடல் அமைப்பு மிகவும் நல்லிணமாக அழகாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கவிஞர் கண்ணதாசன் மிகவும் ரசித்து எழுதிய அந்த பாடலில் பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசி மொழியா? கோவில் கொண்ட சிலையா? கொத்து மலர் கொடியா? என்று எழுதியிருப்பார். மேலும் அந்த பாடலுக்கிடையில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களையும் கூறியிருப்பார்.

எம்.ஜி.ஆர் கேரளா மேனன் குடும்பத்தை சார்ந்தவர் தான். இன்றைய கேரளா அன்றைய சேர நாடாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் பிறப்பை தவிர்த்து, வளர்ந்தது, வாழ்ந்தது அனைத்துமே தமிழ்நாட்டில் தான். அதன் காரணமாக, அந்த பாடல் வரிகள் மூலமாக சரோஜாதேவியை கண்ணதாசன் இப்படி பாட வைத்திருப்பார்.

M.G.R

பாடுவது கவியா? இல்லை பாரி வள்ளல் மகனா? சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா? என்ற வரிகள் அந்த பாடல் அமைந்திருக்கும். ஆனால் இந்த பாடல் வரிகளை சாதாரணமாக பார்த்தால், அது ஒரு பாடலாகவே தெரியும் ஆனாலும் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அனைத்தும் புரியும்.  இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்ட பின்னர் எம்.ஜி.ஆர் அந்த பாடல் வரிகளை கேட்டு புன்னகைத்திருக்கிறார். அடுத்த சில தினங்களில் ஒரு ஸ்டுடியோவில் கண்ணதாசனை எம்ஜிஆர் பார்த்திருக்கிறார்.

அப்போது, என்ன கவிஞரே, சேரனுக்கு உறவா? என்று கேட்டுள்ளார். அதற்கு கவிஞரோ, ஆமா பாரிவள்ளல் மகன் அவர்தான் செந்தமிழர் நிலவு என்று சொல்லியிருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் இப்படி சொன்னவுடன், எம்.ஜி.ஆர் கலகலவென சிரித்து விட்டார்.

பொதுவாக கவிஞர்கள் பாடல் எழுதுவது இயல்பான விஷயம்தான். ஆனால் அந்த பாடலுக்குள் கால சூழலுக்கு ஏற்றவாறு தன் கருத்தையும் கலப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதேபோல அதை ஏற்றுக் கொள்வதற்கு எம்ஜிஆர் போல நல்ல மனமும் தேவை. இந்தப் பாடலில் அனைத்தும் கலவையாக இருந்ததால் பாடல் சூப்பர் ஹிட்டானது.