என்னது... திருப்பதியிலா... நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து வெளியான புதிய தகவல்..

என்னது... திருப்பதியிலா... நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து வெளியான புதிய தகவல்..



Thirupathi kovil nayanthara Vignesh Sivan marriage

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்தியளவில் பிரபலமாக இருக்கும் இவருக்கென முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.

இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருகின்றனர். மேலும் இருவரும் ஒன்றாக சுற்றுலா செல்வது, கோயில்களுக்குச் செல்வது என பிஸியாக இருந்து வருகின்றனர். அந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகும்.

nayanthara

இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்ற கேள்வி நிலவி வந்த நிலையில் தற்போது புதிய தகவலாக இருவரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன் படி நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்து விட்டு திருமண ஏற்பாடுகளை பார்வையிட சென்றதாகவும் தகவல் கசிந்து வருகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.