அதிர்ச்சி.. ரஜினியுடன் தில்லு முல்லு படத்தில் நடித்த குழந்தை நட்சத்திர நடிகர் திடீர் மரணம்.!Thillu mullu movie child actress death news

தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி படங்களின் லிஸ்டில் எப்போதும் இடம் பிடித்திருக்கும் படம் ரஜினி நடிப்பில் வெளிவந்த "தில்லு முல்லு". 1981ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் ரஜினி முதன் முறையாக ஒரு மாறுபட்ட வித்தியாசமான காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

rajini

மேலும் இப்படத்தில் தேங்காய் சீனிவாசன், மாதவி உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். மீசையை வைத்து ரஜினி செய்யும் தில்லு முல்லுகளும், அதை மறைக்க தன் முதலாளியான தேங்காய் சீனிவாசனிடம் அவர் செய்யும் ரகளைகளும் இப்போதும் காண்பவரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

இப்படத்தில் ரஜினி செய்யும் தில்லு முல்லுகளை கண்டுபிடித்து, அதை வைத்து ரஜினியை மிரட்டி அவரிடம் பணம் கேட்கும் குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் சந்திரசேகர் என்பவர்  நடித்திருப்பார். கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது காலமாகிவிட்டதாக தெரிய வந்துளளது.

rajini

இச்செய்தியை இவரது மகன் கார்த்திக் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து கூறிய அவர், சந்திரசேகரனுக்கு ரஜினியை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், அது கடைசி வரை நிறைவேறவில்லை என்றும் கூறியுள்ளார்.