பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
ஈஸ்வர் - மகாலஷ்மி விவகாரம்! முக்கிய முடிவெடுத்த தொலைக்காட்சி நிறுவனம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஈஸ்வர் - மகாலஷ்மி விவகாரம்! முக்கிய முடிவெடுத்த தொலைக்காட்சி நிறுவனம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த சில வாரங்களாக பிரபல சின்னத்திரை நடிகர்கள் ஈஸ்வர் - மகாலக்ஷ்மி விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. ஒருவர் மாறி ஒருவர் புகார் தெரிவித்துவந்த நிலையில் தற்போதுதான் அந்த பிரச்சனை சற்று குறைந்துள்ளது. இருப்பினும், ஈஸ்வர், மஹாலஷ்மி இருவரும் தேவதையை கண்டேன் தொடரில் நடித்துவருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் அந்த சீரியலில், இந்த பிரச்சனைக்கு பிறகு சீரியல் மீதான கண்ணோட்டம் ரசிகர்களுக்கு மாறியிருப்பதாகவும், ஈஸ்வர்- மகாலட்சுமி பிரச்னை ரசிகர்களின் மனதில் அத்தொடர் மீது எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கியிருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் கருதுவதாக கூறப்படுகிறது.
ஷூட்டிங் நடைபெறும் இடம் கூட மிக இறுக்கமாக இருப்பதாகவும், இதனால் தேவதையை கண்டேன் தொடரை முடித்துவிட்டு, தயாரிப்பு நிறுவனம் புது தொடரை விரைவில் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.