இந்தியா சினிமா

பிரபல சினிமா நடிகரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்; ஜிஎஸ்டி அலுவலகம் அதிரடி நடவடிக்கை.!

Summary:

thelungu super star - mahesh babu incom tax problem

நடிகர் மகேஷ்பாபு அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரி பாக்கியை செலுத்த தவறியதால் அவரது வங்கிக் கணக்குகளை ஜிஎஸ்டி அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவர் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரி பாக்கி தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கமிஷனர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

Image result for mahesh babu

இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகர் மகேஷ் பாபு 2007&-2008ம் ஆண்டில் சினிமா, விளம்பரப் படத்தில் நடித்து வந்த வருமானத்திற்காக சேவை வரி 18 லட்சத்து 50 ஆயிரத்தை இன்னும் கட்டவில்லை. இதுகுறித்து மகேஷ் பாபுவை சந்திக்க அதிகாரிகள் பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் அவரது ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது. வரி மற்றும் வரிக்கு வட்டி, அபராதம் ஆகியவற்றை சேர்த்து அவர் 73 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும். அவரது ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து 42 லட்சம் பெறப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி கணக்கில் இருந்து மீதித் தொகை பெறப்படும். வங்கி தர மறுத்தால் மகேஷ்பாபு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Advertisement