தமிழகம் சினிமா

தமிழ் ராக்கர்ஸில் தான் படம் பார்ப்பேன் என்ற ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்த திரையரங்கம்

Summary:

Theatre owner replies to fan wisely

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யாகிருஷ்ணன், ஃபாஹத் ஃபாசில் உள்ளிட்ட திரையுலக பட்டாளத்துடன் உருவாகி இருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றத்தில், திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த ட்ரெய்லரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

வரும் 29 ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த ராம் முத்துராம் திரையரங்கம், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த விளம்பரத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பலரும் தங்களது கமெண்டுகளை பதிவு செய்தனர். 

அதில் ஒரு நபர், "நாங்க tamil rockers ல பாப்போம்.உங்க தியேட்டர் ல டிக்கெட் எடுக்குற பணத்துக்கு பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டாலும் புண்ணியமா போகும்" என கமெண்ட் செய்திருக்கிறார். 

இதற்கு சூசகமாக பதிலடி கொடுத்துள்ள ராம் திரையரங்கம், அந்த நபரிடம், "இதனை உடனடியாக செய்து ஒரு புகைப்படம் எடுத்து இங்கே பதிவு செய்யுங்கள். எங்களால் ஒரு ஏழைக்கு நல்லது நடந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. நான் காத்திருக்கிறேன்" என பதிலளித்துள்ளது. திரையரங்கின் இந்த தரமான பதிலடிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 


Advertisement