சினிமா

தல படத்திற்காக பிரபல தியேட்டரையே இப்படி மாத்திட்டாங்களே.! வைரலாகும் வேற லெவல் புகைப்படங்கள்!!

Summary:

theatre changed as court

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் படத்தில் இருந்து பல காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும் படம் முழுவதும் லீக் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை  திரைப்படம்நாளை  வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் நீதிமன்ற வளாகம் போன்று செட் அமைத்து கட் அவுட்டுகளை வைத்து ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர். இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement