தி மார்வெல்ஸ் திரைப்படத்தின் ப்ரமோஷன் பணியில் நடிகை சமந்தா; ஹாலிவுட்க்காக களமிறங்கி அசத்தல்.!The Marvels Movie Promotion Samantha Spotted 

 

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ப்ரையி லார்சன், டியோனா பாரிஸ், இமான் வெள்ளாணி, சாவே அஷ்டன், பார்க் சியோ ஜூன், சாமுவேல் ஜாக்சன் உட்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் தி மார்வெல்ஸ். 

உலகைக்காக்க ஏற்படுத்தப்பட்ட கற்பனை கதாபாத்திரங்களின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து வெளியான பல பாகங்களின் நீட்சியாக, தற்போது தி மார்வெல்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. 

274.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், சர்வதேச அளவில் பல மொழிகளில் நவம்பர் 10 அன்று வெளியாகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் ஹைதராபாத்தில் நடந்தது. 

அங்கு நடிகை சமந்தா படத்தில் கதாபாத்திரத்தில் அணிந்த வேடங்களை ஒத்த நபர்களுடன் புகைப்படம் எடுத்து, ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டார். படத்தின் டிரைலர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அது உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.