புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
குணசேகரன் கதாப்பாத்திற்கு வந்த சோதனை.! நேரம் பார்த்து காலை வாரும் நடிகர்.. சிக்கித்தவிக்கும் சீரியல் குழு.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இந்த சீரியலின் மூலமே தமிழ் ரசிகர்களிடைய பிரபலமானார்.
எதிர்நீச்சல் சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி இணையத்தில் பரவி ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இதன்படி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று கூறப்பட்டு வந்தது.
இது பற்றி சமூக வலைதளங்களில் நடிகர் வேலா ராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று ரசிகர்கள் பலரும் சீரியல் குழுவிற்கு வலியுறுத்த ஆரம்பித்தனர். இதையடுத்து இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான வேலா ராமமூர்த்தியை சீரியல் குழு அனுகியுள்ளது. தனக்கு இருக்கும் டிமாண்ட் பற்றி தெரிந்து கொண்ட வேலா ராமமூர்த்தி இதுதான் சமயம் என்று சீரியல் குழுவிடம் சீன் போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
தன்னை சீரியல் குழு அனுகியதாகவும் ஆனால் தனக்கு வேறு சில படப்பிடிப்புகள் இருப்பதால் தன்னால் அதில் நடிக்க முடியாது என்றும் அவரே நேரடியாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். விஷயம் கால்ஷீட் சம்பந்தப்பட்டது இல்லை என்றும், ஏற்கனவே படங்களில் நடிக்க அதிகப்படியான சம்பளம் வாங்கி வரும் வேலா ராமமூர்த்தி சீரியலில் நடிக்க மிக அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை உட்பட சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருவதால், சீரியல் குழு அவசரமாக ஒரு சரியான நபரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஏற்கனவே மாரிமுத்துவின் குரலுக்கு பதில் வேறொரு குரல் ஒலித்து வரும் நிலையில் விரைவில் அவர் நடித்த எபிசோடுகளும் முடிவடைந்து விடும் என்பதால் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்ய சீரியல் குழு அதிகப்படியான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. இதைப் புரிந்து கொண்ட வேலா ராமமூர்த்தி இதுதான் சமயம் என்று சீன் போடுகிறார் என்று சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.