சனம் ஷெட்டியுடன் ஏற்பட்ட காதல் பிரச்சினை! மனம்திறந்து முதன்முறையாக தர்ஷன் வெளியிட்ட பதிவு! ஷாக்கான ரசிகர்கள்!tharshan tweet about love with sanam shetty

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த மாடல் தர்ஷன். இவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி. அவர் சமீபத்தில் தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது ஆனால் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

sanam shetty

இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக முதன் முறையாக தர்ஷன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர்  எந்தவொரு காரணத்திற்காகவும் உறவுகள் தோல்வியடைகின்றன என்பது அது அந்த இருவர்களுக்கிடையேயுள்ளது. இருநபர்களுக்கு இடையேயான உறவில் யாரேனும் ஒருவரோ அல்லது இருவருமே மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தால், அவர்கள் பிரச்சனை பெரிதாவதற்குள் இணக்கமான முறையில் பிரிவதே சிறந்தது. 

அந்த நபர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது.ஆனால் நிலைமை மாறிவிட்டது. அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் என்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். எந்த புகாரும் உண்மை இல்லை. இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். நான் இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இப்போது எனது கேரியர், எதிர்காலத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளேன். எது நடந்தாலும் என் பக்கம் இருப்பவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Relationships fail for whatever reasons and that is between those two people. If one or both are unhappy then the realistic choice is to go seperate ways amicably before things become too difficult. Being in an unhappy relationship for whatever reason is not right and there was never any intention to hurt. I had the utmost respect for this person but things became unhealthy and they couldn't accept that reality and set out to purposely destroy me. None of the allegations have been true and my personality has been put on trial by the media and those who do not know the truth or facts. I am deeply hurt by this and took time away from social media etc for this reason. Setbacks happen in life but I have learned from this and am now more than ever focused on the future and my career. Thank you so much to those who stood by me no matter what and for that i am eternally grateful.

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on