விசாரணைக்கு வந்த தர்ஷன் - சனம் ஷெட்டி பிரச்சினை! நீதிமன்றம் விடுத்த அதிரடி அறிவிப்பு!tharshan-sanamshetty-case-coming-to-court

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களால் பெருமளவில் அறியப்பட்ட அவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

சனம் ஷெட்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி,  மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சனம் ஷெட்டி, தர்ஷன் 2 ஆண்டுகளாக என்னை காதலித்து ஆசைகாட்டி, திருமணம் செய்துகொள்ள நிச்சயதார்த்தமும் செய்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும் அவர் தன்னை தொடர்ந்து மிரட்டிவருகிறார் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

sanam shetty

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது,  சனம்ஷெட்டி புகார் அளித்ததை தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு  காவல்துறைக்கு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.