சினிமா வீடியோ பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்களா!! அதிரடியாக நுழைந்த இரு பிரபலங்கள்!! இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய போட்டியாளர்கள்!! வீடியோ இதோ..

Summary:

tharshan kavin entered in bigboss house

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்று ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, லாஸ்லியா, முகேன் மற்றும் ஷெரின் மட்டுமே இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.  

கடந்தவாரம் சற்றும் எதிர்பாராதவிதமாக கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். அதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி கட்டத்திற்கு சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் தர்ஷன் குறைந்த வாக்குகள் பெற்று  வெளியேற்றப்பட்டார். இது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Bigg Boss 3 - 4th October 2019 | Promo 1 க்கான பட முடிவுஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நாள்தோறும் பிக்பாஸ் நடிகர் நடிகைகள், முன்னாள் போட்டியாளர்கள், தொகுத்து வழங்குபவர்கள் என அனைவரையும் விருந்தினராக அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் விருந்தினராக சென்றுள்ளனர். அவர்களை கண்டதும் பிக்பாஸ் வீடே பெரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.மேலும் சாண்டி மற்றும் முகேன் ஆகியோர் உற்சாகத்தில் தர்ஷன் மற்றும் கவினை தூக்கிக்கொண்டு பிக்பாஸ் வீட்டை சுற்றி வருகின்றனர். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement