கைது செய்யப்படுவாரா தர்ஷன்! சனம் ஷெட்டி விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!tharshan jamin appoinment rejected by court

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த மாடல் தர்ஷன். இவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி. இவர் தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த பொழுது அவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர்கள் இருவரும் பல விருது விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

sanam shetty

இந்நிலையில் சமீபத்தில் சனம் ஷெட்டி  தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது ஆனால் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் தர்ஷனுக்காக இதுவரை 15 லட்சம் வரை செலவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தர்சனும் அவரது சார்பில் பல குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

மேலும் சனம் ஷெட்டியின் வழக்கறிஞர், பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் பண மோசடி போன்ற குற்றத்திற்காக தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் தர்ஷன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தர்ஷன் தரப்பில் முன்ஜாமீன் கேட்டதாகவும், ஆனால் அதற்கு  நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தர்ஷன் கைது செய்யப்படுவாரோ என சினிமாவுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.