சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த நிமிடமே தர்ஷனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! பெரும் உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Summary:

tharshan got movie chance

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாகவும்,  பரபரப்பாகவும் இன்றுடன் 100வது நாளை கடந்துள்ளது. மேலும் 16 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது ஷெரின், லாஸ்லியா, முகேன்,  சாண்டி என நான்கு பேர் மட்டுமே இறுதி நிலையில் உள்ளனர். 

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த தர்சன். விளம்பர மாடலான இவர் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து வெற்றிபெறவேண்டும் என பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இந்நிலையில் அனைத்து டாஸ்க்குகளையும் விறுவிறுப்பாக செய்து வந்த தர்ஷன் கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தர்சன் இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது போட்டியாளர்கள் பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

tharsan elimination க்கான பட முடிவு

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடனே தர்சனுக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நட்புனா என்னனு தெரியுமா படத்தை தயாரித்த லிப்ரா புரொடக்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில்,தர்ஷன் இறுதியாக உங்களின் கேம் முடிவுக்கு வந்துவிட்டது ஆனால் கோலிவுட்டில் உங்களுடைய கேம் இனிதான் துவங்கவிருக்கிறது.லிப்ரா புரொடக்ஷன் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனைக்கண்ட ரசிகர்கள் பலரும் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில் விரைவில் தர்ஷன் நடிக்கவிருப்பதாக கூறிவருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement