சினிமா வீடியோ பிக்பாஸ்

செம கோபத்துடன் கவினிடம் பொங்கியெழுந்த தர்சன்.! திடீர் மோதலால் அதிர்ச்சியில் உறைந்த பிக்பாஸ் வீடு!! ஷாக் வீடியோ இதோ..

Summary:

tharsan kavin fight in bigboss house

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும்  இன்னும்இறுதி கட்டத்திற்கு  இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

Image result for Bigg Boss 3 - 18th September 2019 | Promo 1

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். நேற்று வரை டிக்கெட் டு பினாலே டாஸ்கின் 4 போட்டிகள் முடிவடைந்தது.

இன்று 5 வது போட்டியாக ஒரு வட்டத்திற்குள் அனைவரும் ஓடி கொண்டு மற்றவர் பையில் இருக்கும் தெர்மாகோலை கீழே தள்ளி விட வேண்டும். அப்பொழுது தர்ஷனின் பேக்கை கவின் இழுத்துவிட்டதால் கோபமடைந்த தர்சன் இதுகுறித்து கவினிடம் ஆவேசமாக பேசியுள்ளார்.மேலும் அதனை கண்டு போட்டியாளர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement