இதுக்குத்தான் காத்திருந்தோம்! தலைவர் ரசிகர்களுக்காக செம மாஸாக வெளிவந்த மாபெரும் உற்சாக தகவல்! என்ன தெரியுமா?

இதுக்குத்தான் காத்திருந்தோம்! தலைவர் ரசிகர்களுக்காக செம மாஸாக வெளிவந்த மாபெரும் உற்சாக தகவல்! என்ன தெரியுமா?



tharpar-audio-launch-detail-released

 பேட்ட படத்தை தொடர்ந்து  ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் அவர் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் தர்பார்  திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் அந்த திரைபடத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

லைகா புரொடக்ஷன் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தர்பார்  படபிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

Tharpar

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெருமளவில் வைரலானது. மேலும் சும்மா கிழி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்பொழுது என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் தற்போது டிசம்பர் 7ம் தேதி சென்னை நேரு உள்ளரங்கத்தில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும்  பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழுவினர்  அறிவித்துள்ளனர்.இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.