எந்த நடிகருக்கும் இப்படியில்லை.. தனுஷின் அந்த ஒத்த புகைப்படம் படைத்த பெரும் சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்!!

எந்த நடிகருக்கும் இப்படியில்லை.. தனுஷின் அந்த ஒத்த புகைப்படம் படைத்த பெரும் சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்!!


thanush one photo got million likes in social media

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக வலம்வருபவர் நடிகர் தனுஷ். தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது ஹிந்தி, ஹாலிவுட் என செம பிஸியாக உள்ளார். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும்  வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

மேலும் இவரது நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தனுஷ் தற்போது ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக அவர் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றார். இரண்டு மாதங்களாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் கோலிசோடா பிடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் அதில் ஹே கோலி சோடாவே’ என்ற பாடல் வரிகள் தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் வைரலாகி தற்போது ஒரு மில்லியன் லைக்ஸ்களை குவித்துள்ளது. முதல் முறையாக ஒரு தமிழ் நடிகர் வெளியிட்ட புகைப்படம் இத்தகைய சாதனையை படைத்துள்ளது என தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.