11 வருஷங்களுக்குப் பிறகு.. செம எமோஷனலான நடிகர் தனுஷ்.! என்ன காரணம் பார்த்தீங்களா!!

11 வருஷங்களுக்குப் பிறகு.. செம எமோஷனலான நடிகர் தனுஷ்.! என்ன காரணம் பார்த்தீங்களா!!


Thanush emotional tweet for 3 re release response

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டு விளங்கி வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 3.

இந்தப் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் வந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்த நிலையில் கடந்த வாரம் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

3

இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,  "3 ரீ ரிலீஸ் ரெஸ்பான்ஸை பார்த்து மிகவும் எமோஷனல் ஆகிவிட்டேன். அனைவருக்கும் எனது மில்லியன் நன்றிகள்" என தெரிவித்துள்ளார்.