பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை காதலிக்கிறாரா தமன்னா? அவரே கூறிய உண்மை தகவல்!thamanna-love-with-cricket-player-virat-kholi

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழில் வெளியான கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தற்போது உதயநிதிக்கு ஜோடியாக கண்ணே கலைமானே படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் விளம்பர படம் ஒன்றில் தமன்னா விராட்கோலியுடன் இணைந்து நடித்தபோது இருவரும் காதலித்ததாகவும், இவர்களது காதல் திருமணம் வரை செல்லவுள்ளதாகவும் செய்திகள் வைரலானது.

Thamanna

ஆனால் அதன்பின்னர் விராட்கோலி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் முதன் முறையாக இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை தமன்னா.

நானும் விராட்கோலியும் ஒரே ஒரு விளம்பர படத்தில் மட்டுமே நடித்தோம் அப்போது மட்டுமேதான் நான் அவரிடம் பேசினேன் அதன்பின்னர் நான் அவரை சந்தித்ததும் இல்லை பேசியதும் இல்லை என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா.