சினிமா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் விரைவில் திருமணம்.? ஒன்றாக நகை வாங்கிய தமன்னா..! வைரலாகும் வதந்தி.!

Summary:

Thamanna love rumor with pakistani cricketer

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை தமன்னா காதலித்துவருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான அப்துல் ரசாக் என்பவரைதான் தமன்னா காதலிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. காரணம், இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு நகை கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டபோது, கடையில் நகை எடுப்பதுபோல புகைப்படங்கள் வெளியாகின.

இந்த புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு, இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், தங்கள் திருமணத்திற்காக இருவரும் நகை கடையில் நகை வாங்குவதாகவும் கூறி வதந்திகள் பரவிவருகிறது. இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்துல் ரசாக்கிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement