அண்ணாச்சி படத்தில் ஒருபாடலுக்கு ஆடும் முன்னணி நடிகை.! சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

அண்ணாச்சி படத்தில் ஒருபாடலுக்கு ஆடும் முன்னணி நடிகை.! சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?


thamanna-dancing-single-song-in-saravanan-arul-movie

சரவணா ஸ்டோர்ஸ் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான கடைகளில் ஓன்று நம்ம அண்ணாச்சி சரவணா ஸ்டோர்ஸ். நடிகர், நடிகைகளை வைத்து தனது கடைக்கு விளம்பரம் எடுத்துவந்த உரிமையாளர் அருள் தனது கடை விளம்பரத்தில் சமீபகாலமாக தானே விளம்பர படங்களில் நடித்துவருகிறார்.

இதனால் பல்வேறு கேலி கிண்டல்களுக்கு ஆளாகியிருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார் அருள். இந்நிலையில் அருள் சினிமாவில் நடிக்க போவதாகவும், நயன்தாராதான் ஹீரோயின் எனவும் பரவலாக பேசப்பட்டது.

Saravana stores

தற்போது அதை உண்மையாகும் வகையில் திரைப்படம் ஒன்றில் நடித்துவருகிறார் அருள். அருளை வைத்து விளம்பர படங்களையும், பிரபல சீரியல் ஒன்றையும் இயக்கி இருக்கும் இரட்டையர்களான ஜேடி_ஜெர்ரி அருளை இயக்குகின்றனர்.

இந்த படத்தில் அண்ணாச்சி அருளுக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற கீர்த்திகா திவாரி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு பத்துகோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட பிரபல நடிகை தமன்னாவை புக் செய்திருக்கிறது படக்குழு. இதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாம்..