தமிழகம் சினிமா

தனது கார் டிரைவர் மகளின் திருமணம்; மனைவியுடன் கலந்து கொண்ட தளபதி விஜய்; வைரலாகும் வீடியோ.!

Summary:

thalapathy vijay car driver daughter marriage

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் தளபதி விஜய். முதல் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

மேலும், தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படமாக இருக்கும் என்பதால் இன்னும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, கதிர், நாஞ்சில் சம்பத் போன்ற முக்கிய பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். 

இந்த நிலையில், படப்பிடிப்பிற்கு இடையில், தன்னிடம் 18 வருடத்திற்கும் மேலாக டிரைவராக பணியாற்றி வரும் ராஜேந்திரன் என்பவரின் மகள் திருமண நிகழ்ச்சியில், தளபதி விஜய், மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement