தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
Thalapathy 68: நடிகர் விஜயின் 68-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! டபிள் ஆக்டிங்கில் தெறிக்கவிடும் தளபதி விஜய்.!!
தளபதி 68 படத்தின் அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரித்து வழங்கும் திரைப்படத்தில், நடிகர் விஜய், பிரசாந்த், பிரேம்ஜி, வைபவ், சினேகா, பிரபுதேவா, லைலா, ஜெயராம், யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், யுவனின் இசையில், சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் எடிட்டிங்கில் படம் உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னை, தாய்லாந்து உட்பட பல இடங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது.
எஞ்சிய படப்பணிகளை விரைந்து முடிக்கவும் படக்குழு தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. படத்தின் முதற்பார்வை போஸ்டர் ஒன்று இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், படத்தின் முதற்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரின் படி இரண்டு கதாப்பாத்திரங்களில் விஜய் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Our Thalapathy is the
— Archana Kalpathi (@archanakalpathi) December 31, 2023
Greatest Of All Time 🔥🔥🔥🔥#GreatestOfAllTime #Thalapathy68FirstLook#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @thisisysr @actorprashanth… pic.twitter.com/SOgQSGHXEF