அச்சோ.. கண்ணுபட்டுருச்சே.! தளபதி 66 பூஜையில் ராஷ்மிகா செய்த காரியத்தை பார்த்தீங்களா! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!thalapathy-66-poojai-photos-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தோழா போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தளபதி 66 படத்தில் ஹீரோயினாக, விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா  நடிக்கவுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

Thalapathy 66

அதனை தொடர்ந்து இன்று சென்னையில் தளபதி 66 படத்தின் பூஜை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, டைரக்டர் வம்சி பைடபள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் பூஜை புகைப்படங்கள் பல இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா, விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்.

Thalapathy 66

Thalapathy 66Thalapathy 66Thalapathy 66