என்னது? தளபதி 63 படத்தின் பெயர் இதுவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

என்னது? தளபதி 63 படத்தின் பெயர் இதுவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!


Thalapathy 63 movie named as CM news going viral

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் விஜய். தெரி, மெர்சல் படங்கள் ஏற்கனவே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தளபதி 63 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.

மேலும் கதிர், யோகிபாபு, ஆனந்தராஜ், இந்துஜா போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துவருகின்றனர். ஏறக்குறைய ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தளபதி 63 படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Thalapathi 63

அந்த வகையில் இந்த படத்திற்கு சி. எம் பெயரிட அட்லீ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலாகிவருகிறது. படத்தில் விஜயின் பெயர் க்ளமெண்ட் மைக்கேல். அதனை சுருக்கி சி.எம் அன வைக்கப்பட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஆனாலும், அட்லீ இந்த பேரைத்தான் வைக்கப் போகிறாரா இல்லை வேறு ஏதும் வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.