ஓ.. தளபதி 66 படத்தில் அவரோட கெட்அப் இதுதானா! வீடியோ காலில் பேசிய விஜய்! தீயாய் பரவும் புகைப்படம்!!

ஓ.. தளபதி 66 படத்தில் அவரோட கெட்அப் இதுதானா! வீடியோ காலில் பேசிய விஜய்! தீயாய் பரவும் புகைப்படம்!!


thalapathi-vijay-video-call-photo-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்த பீஸ்ட் திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

vijay

இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவாறு ரசிகர் ஒருவரிடம் குடும்பத்துடன் வீடியோ கால் பேசியுள்ளார். அந்த ஸ்க்ரீன்ஷாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் இதுதான் தளபதி 66 படத்தில் விஜய்யின் கெட்அப்பா? என கேட்டு வருகின்றனர்.