களை கட்டும் தளபதி பிறந்தநாள்; பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் திட்டம்.!

களை கட்டும் தளபதி பிறந்தநாள்; பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் திட்டம்.!


thalapathi vijay birthday - june22 - fans happy

நடிகர் விஜயின் பிறந்தநாள் வரும் 22ம் தேதி வருகிறது. வழக்கம் போல் இந்த பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கென இந்தியா முழுவதும்  ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இவரது படம் வெளியாகும் நாட்கள் மற்றும் இவரது பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாவை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

தற்போது, விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் ரசிகர்கள் "Me - Vijay" என்ற கீ வேர்டை டிரெண்டாக்கினர். தற்போது நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு பொது ஒரு கவர் படம் வைக்க #ThalapathyDayCommonCP என் ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் அந்த புகைப்படத்தை பரப்பி வருகின்றனர். 

அந்த நாளில் விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை தங்களின் சமூகவலைதள பக்கத்தின் கவர் படமாக வைத்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.  

மேலும் அன்று நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் அதனுடன் படத்தின் டைட்டிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பொதுவாக டிபி தான் பகிரப்படும் நிலையில் அன்று படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் வாய்ப்பு இருப்பதால் அதை டிபியாக வைத்து விட்டு விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த புகைப்படத்தை கவர் படமாக வைக்க விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.