தமிழகம்

தளபதி விஜய் ரசிகர்கள் செம உற்சாகம்! என்ன விஷயம் தெரியுமா?

Summary:

thalapathi vijay - mersal - aalapporan tamilan - 10 crores like

விஜய் அட்லீயுடன் இணைந்து மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் இப்படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான படிப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படமான மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் இடம் பெற்ற பாடல் இந்த அளவிற்கு பார்வையாளர்களை பெற்றுள்ளது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

தளபதி 63 படத்தின் பாடலாசிரியரான விவேக்கின் வரிகளில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் இப்பாடல் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகிழ்ச்சியான செய்தியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். '100 மில்லியன் ஆளப்போறான் தமிழன்' ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement