மாஸ் காட்டிய தளபதி விஜய்; உழைப்பாளர்களுக்கு மெகா விருந்து; ஏன் தெரியுமா?

மாஸ் காட்டிய தளபதி விஜய்; உழைப்பாளர்களுக்கு மெகா விருந்து; ஏன் தெரியுமா?


thalapathi-vijay---labours-day---treat---auto-drivers

தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கென இந்தியா முழுவதும்  ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

இதனிடையே தளபதி விஜய் உழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாண்டு தேர்தல் நேரம் என்பதால் மே 1 அன்று நிகழாமல் தற்போது நடைபெற்றுள்ளது.

விஜய்யின் மக்கள் இயக்க மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் சார்பாக பிரமாண்ட விழாவில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. தளபதி விஜய் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் நிகழ்ச்சியின் கலந்து கொள்ளவில்லை.