விஜய் ரசிகர்களே ரெடியா? இன்னும் சற்று நேரத்தில் தளபதி 68 படத்தின் முக்கிய வீடியோ.!

விஜய் ரசிகர்களே ரெடியா? இன்னும் சற்று நேரத்தில் தளபதி 68 படத்தின் முக்கிய வீடியோ.!



Thalapathi 68 Pooja video today

விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை வீடியோ இன்று மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி வைக்கிறாக இருக்கும் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

vijay

இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான வெளியான நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் பூஜை ஏற்கனவே நடைபெற்றதாகவும் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மோகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

vijay

இந்த நிலையில் தளபதி 68 படத்தின்  பூஜை மற்றும் படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வீடியோவை படக்குழு இன்று மதியம் 12.05 வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.