விஜய் ரசிகர்களே ரெடியா? தளபதி 68 படத்தின் புரோமோ வீடியோ எப்போது ரிலீஸ்.!

விஜய் ரசிகர்களே ரெடியா? தளபதி 68 படத்தின் புரோமோ வீடியோ எப்போது ரிலீஸ்.!



Thalapathi 68 movie promo video update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

Thalapathi 68

இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான வெளியான நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் பூஜை ஏற்கனவே நடைபெற்றதாகவும் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மோகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது எந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Thalapathi 68

இந்த நிலையில் தளபதி 68 படத்தில் டைட்டில் மற்றும் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த புரோமோ வீடியோவிற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.