என்னது..தளபதி 66 படத்தை இயக்கப்போவது இந்த பிரபலமா! அப்போ அவர் இல்லையா??ஷாக்கான ரசிகர்கள்!!

என்னது..தளபதி 66 படத்தை இயக்கப்போவது இந்த பிரபலமா! அப்போ அவர் இல்லையா??ஷாக்கான ரசிகர்கள்!!


thalapathi-66-movie-details-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர். இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியுள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இதில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

Thalapathy 66

இந்த நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 66வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜே இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவிருப்பதாகவும், அப்படத்தை தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.