தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக போவது இந்த நடிகையா? தீயாய் பரவும் தகவல்! செம குஷியில் ரசிகர்கள்!!

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக போவது இந்த நடிகையா? தீயாய் பரவும் தகவல்! செம குஷியில் ரசிகர்கள்!!


thalapathi 65 movie heroine details viral

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரது பிறந்தநாள், படம் வெளியாகும் நாட்களை அவரது ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருவர்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் 64வது திரைப்படமான மாஸ்டர்  கொரோனோ ஊரடங்கால்  ரிலீசாவது தள்ளிப் போன நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.  அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ளார்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Thalapathi 65

இப்படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரவிருக்கும் ஹீரோயின் குறித்த தகவல் பரவி வருகிறது. அதாவது தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. பூஜா ஹெக்டே முகமூடி திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக உள்ளார். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரவில்லை.