விஜய்யின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? செம மாஸ் தகவல்!!

விஜய்யின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? செம மாஸ் தகவல்!!



Thalapathi 64 movie title name leaked

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று சுமார் 300 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார் விஜய்.

படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலானது. படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகாந்த் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ரமணா படம் போன்று இந்த படமும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.

Thalapathy 64

இந்நிலையில் படத்தின் பெயர் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் படத்திற்கு சம்பவம் என பெயர் வைக்கலாம் என படக்குழு யோசித்ததாகவும், ஆனால், நீட் தேர்வு, மருத்துவத்துறை ஊழல் இவற்றை பற்றி படத்தின் கதை இருக்கலாம் என்பதால் டாக்டர் என பெயர் வைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் பெயர் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரும் வரை காத்திருப்போம்.