சினிமா

தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் இதோ! செம உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Summary:

thalapathi 63 new abdate - today 6.pm

தெறி, மெர்சலை தொடர்ந்து விஜய் அட்லீயுடன் கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விஜய் 63 படத்தின் தலைப்பு என்ன, பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் ஏதாவது தாருங்கள் என்று இப்படத்தின் க்ரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாதியிடம் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் டேக் 
செய்து தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ரசிகர்களுக்கு பதில் அளித்த அர்ச்சனா கல்பாதி:  

தளபதி 63 படம் குறித்த அப்டேட் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தான் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வெளியாகப் போவது இப்படத்தின் டைட்டிலா அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா அல்லது பாடலா என்ற குழப்பத்துடன் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Advertisement