வைரலாகும் தளபதி 63 படப்பிடிப்பு தள வீடியோ.!

thalapathi 63 movie - kasimadu- vijay- nayanthara


thalapathi 63 movie - kasimadu- vijay- nayanthara

விஜய் அட்லீயுடன் இணைந்து மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும்  இப்படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெளியான இந்த வீடியோவில் சென்னை காசிமேடு பகுதியில் விஜய், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான படிப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அவர் நடித்த முதல் காட்சியே திருமணம் நடப்பது போன்ற காட்சியாம். மேலும் அந்த காட்சிகள் ராஜாராணி படத்தில் வருவது போல பிரபல சர்ச் ஒன்றில் நடைபெற்றுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளது.