தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி எப்போ தெரியுமா?

தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி எப்போ தெரியுமா?


thalapathi 63 - movie first look poster release date gussing

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் விஜய். தெரி, மெர்சல் படங்கள் ஏற்கனவே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தளபதி 63 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.

மேலும் கதிர், யோகிபாபு, ஆனந்தராஜ், இந்துஜா போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துவருகின்றனர். ஏறக்குறைய ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தளபதி 63 படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வெளியானது. 2018ம் ஆண்டு சர்கார் படத்தின் போஸ்டர் வெளியானது. இதையடுத்து, வரும் ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி63 படத்தின் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி 63 படத்தின் பாடல் ஆசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் 30 என பதிவிட்டுள்ளார். இது, தளபதி விஜய் பிறந்தநாள் கவுண்டவுன் என்பது குறிப்பிடத்தக்கது.