தளபதி 63 : பர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு; ரசிகர்கள் உற்சாகம்.!

தளபதி 63 : பர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு; ரசிகர்கள் உற்சாகம்.!


thalapathi 63 - first look poster release date announced

விஜய் அட்லீயுடன் இணைந்து மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும்  இப்படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

Thalapathi 63

இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான படிப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் சமீபத்தில் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி மற்றும் சென்னை காசிமேடு துறைமுகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது சித்திரை 1 அதாவது வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.