ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு!! தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அதுவும் எப்போது தெரியுமா?

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு!! தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அதுவும் எப்போது தெரியுமா?



thalaivi-movie-release-date-announced

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் எம்ஜிஆராக அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாக்கியுள்ள, இப்படத்தை விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தலைவி திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் தலைவி திரைப்படம் தற்போது ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.