அச்சு அசல் MGR ஆகவே மாறிய நடிகர் அரவிந்த் சாமி..! புகைப்படம் பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்..!

Thalaivi movie aravind samy stills


Thalaivi movie aravind samy stills

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அரவிந்த்சாமி. தளபதி படத்தை அடுத்து இவர் ஹீரோவாக நடித்த ரோஜா திரைப்படம் இவரை இந்திய சினிமாவில் பிரபலமடையவைத்தது. அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார் அரவிந்த்சாமி.

குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் தனி ஒருவன் படத்தின் மூலம் ஸ்டைலிஷ் வில்லனாக தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் இவர், அடுத்ததாக இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் தலைவி படத்தில் MGR கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

Thalaivi

ஜெயலலிதாவாக நடிகை கங்கனா நடிக்கின்றனர். மீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அதில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம் ஜெயலலிதாவின் தோற்றத்தோடு ஒத்திருக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. தற்போது MGR ஆக நடிக்கும் அரவிந்த்சாமியின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அதில், MGR இன் சாயலை ஒத்து, அவரைப்போலவே இருக்கின்றார் நடிகர் அரவிந்த்சாமி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த் சாமியா இது என்று ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.