வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
Thalaivar 170: "நல்ல கருத்து, பொழுதுபோக்கு திரைப்படம்" - தனது படத்தின் அப்டேட்டை தான் வாயால் சொன்ன ரஜினிகாந்த்.!
நெல்சன் திலீப் குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படம், உலகளவில் வசூலையும்-வரவேற்பையும் வாரிக்குவித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தயாரிப்பு நிறுவனம் இசையமைப்பாளர் அனிரூத், ரஜினிகாந்த், நெல்சன் ஆகியோருக்கு கார் பரிசு வழங்கி இருந்தது.
இதனையடுத்து, ரஜினிகாந்த் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, ரஜினிகாந்த் இன்று படத்தில் நடிக்க புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், "ஜெயிலர் திரைப்படம் எதிர்பாராத வெற்றியை அடைந்துள்ளது. அடுத்த திரைப்படம் நல்ல கருத்துக்கள் கொண்ட, பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். விரைவில் படத்தின் பெயர் அறிவிக்கப்படும்" என்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.