புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#Breaking: ரஜினிகாந்தின் 170வது படத்தின் தலைப்பு இதோ: உற்சாகத்தில் ரசிகர்கள்.!
டி.ஜெ ஞானவேல் இயக்கத்தில், லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170.
இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மும்பை, திருவனந்தபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தற்போது வரை படப்பிடிப்பு நடந்துள்ளது.
ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று தலைவர் 170 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில், ரஜினிகாந்தின் 170வது படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.