பிகில் படத்தை பாராட்டித்தள்ளும் தல அஜித் ரசிகர்கள்! அவர்கள் கூறும் ஒரே வார்த்தை!thala fans talk about bikil movie

பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி அளித்ததால் உற்சாகமடைந்த ரசிகர்கள், அதிகாலை முதலே திரையரங்குகள் நோக்கி படையெடுத்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. 

பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் ரத்து என கூறப்பட்டு வந்தநிலையில், பிகில் படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி அளித்ததால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியடைந்தனர்.

பிகில் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். விஜய் ரசிகர்கள் பிகில் படத்தை கொண்டாடிவரும் நிலையில், தல ரசிகர்களும் பிகில் படத்தை பாராட்டி வருகின்றனர்.