சினிமா

12 வருஷங்களுக்கு பின் பைக் ரேஸில் தல அஜித்தை சந்தித்த பிரபல நடிகர்! முடியும், தாடியுமா எப்படி ஆகிட்டார் பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக அல்டிமேட் ஸ்டாராக வல

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூல் சாதனையும் படைக்கும்.

தல அஜித் தற்போது போனிகபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அஜித் அவ்வபோது பைக் ரேஸ் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.

இந்நிலையில் அவர் அண்மையில், ஹைதராபாத்தில் நடந்த ஒரு பைக் ரேஸ் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். அந்த பைக் ரேஸில் நடிகர் நவ்தீப்பும் கலந்து கொண்டுள்ளார். நடிகர் அஜித் மற்றும் நவ்தீப் இருவரும் இணைந்து ஏகன் படத்தில் நடித்திருந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை அவர் தனது  சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement