சினிமா

ரசிகர்கள் தொல்லையால் அஜித் எடுத்துள்ள அதிரடி முடிவு! இனி வீட்டை விட்டு வெளியே போக தேவை இல்லை!

Summary:

Thala ajith builds new house in ecr

தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும் திறமையாலும் மட்டுமே இந்த இடத்திற்கு வந்துள்ளார் தல அஜித். அஜித் மிகவும் பண்பானவர், அமைதியானவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அஜித் எங்கு சென்றாலும் அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து விடுவார்கள். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் தல ரசிகர்கள் அவரை காண படையெடுத்தது, பின்னர் போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது நாம் அறிந்த விஷயம்தான்.

இந்நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க தல அஜித் ஒரு புது முடிவுக்கு வந்துள்ளாராம். அஜித் நடிக்க வந்த புதிதில் மந்தைவெளியில் உள்ள நார்டன் சாலையில் குடியிருந்தார். அதன் பிறகு கொட்டிவாக்கம் வால்மீகி நகருக்கு குடிபெயர்ந்தார். அவருடைய வீட்டைத்தேடி ரசிகர்கள் தினமும் வருவதால் அஜித்துக்கு ஏகப்பட்ட அசௌகர்யம். எனவே அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர்கிறார்.

தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மிக பிரமாண்டமாக, அரண்மனை போன்று ஒரு வீட்டை கட்டி வருகிறார் தல அஜித். அந்த வீட்டில் டிஜிட்டல் தியேட்டர், டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ என சகல வசதிகளும் அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஷூட்டிங் தவிர வேறு எதற்காகவும் அஜித் வீட்டை விட்டு வெளியே செல்ல அவசியம் இல்லை. இதனால் அவரை சூழும் ரசிகர்களை குறைக்க முடியும். மேலும் இந்த வசதிகள் மூலம் அஜித்திற்கு மேலும் வருமானம் கிடைக்கும்.


Advertisement