சினிமா

இன்று வெளியாகும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர்; டிரெண்டான ஹேஷ்டேக்.!

Summary:

thala ajith - nerkonda paarvai tailer today release

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே  மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' தல 59 படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் அடுத்தக்கட்ட வேலைகளான எடிட்டிங் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றது. இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அந்த படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் #NerkondapaarvaiTrailer என்ற ஹேஷ் டேக் தற்போது தேசிய அளவில் முதலிடத்திலும், உலகளவிலும் 5 இடத்தில் டிரெண்டாகி வருகிறது. விரைவில் உலகின் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 


Advertisement