சினிமா லைப் ஸ்டைல்

தாறுமாறாக கலக்கும் தல ரசிகர்கள்-நீங்களும் இதை செய்து விட்டீர்களா!!

Summary:

thala ajith

தல அஜித் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஒரு முன்னணி நடிகர். இவரது படங்கள் ஒவ்வொன்றும் புதிய புதிய சாதனைகள் படைக்கும். தளபதிக்கு எவ்வளவு ரசிகர்கள்  இருக்கிறார்களோ அதேபோலத்தான் தலைக்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். 
தற்போது அஜித்தின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம்தான் நேர்கொண்ட பார்வை.அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது.

படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடக்கிறது, ஆனால் படக்குழுவினரிடம் இருந்து இன்னும் எந்த அப்டேட்டும் வரவில்லை. இது தல ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

தொடர்புடைய படம்

இதற்கு நடுவில் படத்திற்காக ஒரு வித்தியாசமான முயற்சியில் ரசிகர்கள் இறங்கியுள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தை வரவேற்க ரசிகர்கள் தங்களது டுவிட்டர் பக்கம் பெயருக்கு மேல் NKP என்பதை பதிவு செய்து வருகின்றனர்.

படத்திற்காக இந்த வித்தியாசமான முயற்சியை தல ரசிகர்கள் ஆதரித்து அவர்களது பெயருக்கு மேல் NKP என மாற்றி வருகிறார்கள். 


Advertisement