தமிழகம் சினிமா

தல-தளபதி இணையும் படம். தமிழ் சினிமாவின் உச்ச கட்டம்; ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பு..!!

Summary:

thala - thalapathi - new flim - mani rathnam

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் அஜித் விஜய் இணைந்து நடிக்கவிருக்கும் புதிய படத்தின் கதை உருவாக்கி கொண்டிருப்பதாக இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் சிவா ஆனந்த் தெரிவித்துள்ளார் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தனம் இவர் இயக்கிய பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் ரோஜா, அலைபாயுதே போன்ற படங்களும் ரஜினிகாந்த் மம்மூட்டி போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து இவர் இயக்கி வெளிவந்த படமான தளபதியும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

manirathnam will soon join and work with vijay and ajith!

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் பல முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து தனது திறமையை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அஜீத்தையும் விஜய்யும் வைத்து இவரால் படம் எடுக்க முடியும் என்று நம்பலாம்.

செக்கச் சிவந்த வானம் படத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சிவா ஆனந்த். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் மணிரத்தினம் அஜித்தையும் விஜய்யையும் இணைக்க மாட்டாரா  என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் அஜீத்தையும் விஜய்யும் வைத்து படம் எடுக்க தற்பொழுது கதை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.


 


Advertisement