சினிமா வீடியோ

அடேங்கப்பா! மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது அம்மாவிற்காக செய்த காரியத்தை பார்த்தீர்களா! ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்! வீடியோ இதோ!!

Summary:

Telungu mega star Chiranjeevi cook for her mother

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்று ஏராளமான பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக முன்னணியில் இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் இறுதியாக ஆச்சார்யா என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீட்டில் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வரும் சிரஞ்சீவி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுவாரசியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது   அம்மா அஞ்சனா தேவிக்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரெசிபியான மீன் வறுவலை தனது  கையால் செய்து கொடுத்துள்ளார். 

View this post on Instagram

#SundaySavors

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela) on

இந்நிலையில் அந்த வீடியோவை நடிகர் சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மீன்வறுவல் ரெசிபிக்கு தேவையான சமையல் பொருட்கள் என்ன மற்றும் அதனை எப்படி செய்வது என விளக்கமளித்துகொண்டே  செய்துள்ளார். மேலும் சமைத்து  முடித்தபின் அதனை அவரது அம்மாவிற்கு பாசமாக பரிமாறியுள்ளார். மேலும் அவரது அம்மா அதை சாப்பிட்டு சால பாகுந்தி என கூறியதை கேட்டதும் அவர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்

 


Advertisement