உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல காமெடி நடிகர்!! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்!!

telungu comedy actor dead


telungu comedy actor dead

ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ். 74 வயது நிறைந்த இவர்  தெலுங்கில் சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். 
மேலும் அவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் பம்பாய், மின்சார கனவு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

dead

நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ் 5 முறை ஆந்திர அரசின்  சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில காலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்ம ராவ் கடந்த 15ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நரசிம்ம ராவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்  நேற்று மாலை உயிரிழந்தார்.இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .